அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிராந்தியப் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.
கூடுதல் பாதுகாப்பு
இந்தநிலையில் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும் மற்றும் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

யோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கத் இராஜதந்திர நிலையங்கள் உட்படப் பல இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆதரவான அமைப்புகள்
ஈரான் மற்றும் ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நலன்கள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தக்கூடும்.
போர்ச் சூழல் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம்.

வான்வெளிகள் மூடப்படலாம் மற்றும் பயணங்களில் கடும் தடங்கல்கள் ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் உள்ளூர் அரசாங்கம் மற்றும் தூதரகம் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தவறாது பின்பற்றுமாறும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

