• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சவுதி அரேபியா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்.. இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சவுதி அரேபியா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்.. இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 24, 2026 1:22 PM IST

Crude Oil Price | அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் விலையும் 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 91.83 டாலர்களாக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை உயர்வு

செங்கடலில் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை இரு மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தின் மீது சவுதி படைகள் அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில், செங்கடலில் சென்று கொண்டிருந்த இரு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஹூதிகள் மீண்டும் தங்கள் தாக்குதலை தொடங்கிவிட்டதாகவும், இது தொடர்ந்தால் ஈரானையே அமெரிக்கா நேரடியாகப் பொறுப்பாக்கும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதனால், உலகின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி மண்டலமான மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக, சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 7 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 100.79 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமானது.

கடந்த மே 22 ஆம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டுவது இதுவே முதல்முறையாகும். அதேபோன்று, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் விலையும் 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 91.83 டாலர்களாக அதிகரித்துள்ளது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

சவுதி அரேபியா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்.. இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

Read More

Previous Post

நீட் போராட்டம்.. போலீஸ் வேனை ஒற்றை ஆளாக மறித்த வைரல் பெண் யார்? – நடிகை… மாடல்… தந்தை பின்னணி!

Next Post

அன்வாரைக் விட்டு விலகும் எண்ணம் டிஏபி-க்கு இல்லை என லோக் திட்டவட்டம் – Malaysiakini

Next Post

அன்வாரைக் விட்டு விலகும் எண்ணம் டிஏபி-க்கு இல்லை என லோக் திட்டவட்டம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin