• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு… உயர் கல்வித்துறை செயலாளர் பணியிட மாற்றம் – மத்திய அரசு நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நீட் வினாத்தாள் கசிவு… உயர் கல்வித்துறை செயலாளர் பணியிட மாற்றம் – மத்திய அரசு நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 24, 2026 7:41 AM IST

நீட் வினாத்தாள் கசிவு: உயர் கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம், நரேஷ் பால் கங்வார் புதிய செயலாளர். பிரதமர் மோடி உறுதியளித்தபடி, டெல்லி உயர் நீதிமன்றம் விரைவு நீதிமன்றம் அமைத்தது.

News18
News18

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வினாத்தாள் கசிவு என்பது ஒரு சாதாரணப் பிரச்னை அல்ல, அது லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வர்கள் ஒரு ஆண்டை வீணாக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் மிக முக்கியமான நோக்கமாக இருந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கான விரைவு நீதிமன்றம் மற்றும் கடுமையான தண்டனை வழங்க வகைசெய்யும் விதிகள் பற்றி இன்று அமைச்சரவையில் விவாதித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் நடப்பு கூட்டத்தொடரிலேயே இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 22 லட்சம் மாணவர்கள் மிகக் குறுகிய காலத்தில் நீட் மறு தேர்வு எழுதுவதை உறுதிசெய்ய மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி உறுதியளித்தபடி, பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிப்பதற்காக, டெல்லி உயர் நீதிமன்றம் விரைவு நீதிமன்றத்தை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த வினீத் ஜோசியை பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உயர்கல்வித்துறை செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

35 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய கரடி

Next Post

வத்தளையில் குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

Next Post
வத்தளையில் குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

வத்தளையில் குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin