
35 அடி உயரத் தொலைபேசி மின் கம்பத்தின் உச்சியில் கரடி ஒன்று சிக்கிக்கொண்டு, பின்னர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மனதை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேரில் பார்த்தவர்கள் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெரிய கரடி தன் பின் கால்கள் காற்றில் தொங்கியபடி மின் கம்பத்தின் உச்சியில் மாட்டிக்கொண்டிருக்கும் அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
அந்தத் தனித்த கரடி, மரக் கம்பத்தின் உச்சியைத் தனது முன்னங்கால்களால் இறுகப் பற்றியபடி, அசையக் கூட முடியாமல் மூச்சு மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தது.
நியூ மெக்சிகோவிலிருந்து ஒக்லஹோமாவிற்கு ஹைவே 56 வழியாக வாகனம் ஓட்டிச் செல்லும்போது திங்கட்கிழமை இக்காணொளியைப் படம்பிடித்த ஷானன் முல்லன்ஸ் (Shannon Mullens) என்பவர் தெரிவிக்கையில், கிளாட்ஸ்டோன் (Gladstone) பகுதிக்கு அருகில் இந்த மிருகத்தைக் கண்டு, மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளத் தனது வாகனத்தைத் திருப்பி வந்ததாகக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்:
“முதலில் நாங்கள் கண்டதை எங்களாலேயே நம்ப முடியவில்லை. அதனால் மீண்டும் ஒருமுறை பார்ப்பதற்காக வாகனத்தைத் திருப்பினோம். தொடக்கத்தில் கரடி இறந்துவிட்டதாகவே நினைத்தோம்; ஆனால் அருகில் சென்று பார்த்த பின்னரே அது உயிரோடு இருப்பதை உணர்ந்தோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து அவசர உதவி எண்ணிற்கு (911) அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், கரடியைக் காப்பாற்ற எதுவுமே செய்ய முடியாது என்று நியூ மெக்சிகோ வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்ததாகச் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
கம்பத்தில் இருக்கும்போதே மயக்க ஊசி செலுத்தி, பின்னர் மேலே ஏறி அதைக் கீழே கொண்டுவருவது மட்டுமே ஒரே வழியாக இருந்தது.
ஆனால், மயக்கமடைந்த பிறகு கரடி கீழே விழுந்து, தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொள்வதுடன் கீழே இருப்பவர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்ற அபாயம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் அந்த முடிவைக் கைவிட்டனர்.

