தென்னிலங்கையில் பௌத்த சிங்களவர்களின் ஆதிக்கத்தில் உள்ள மாத்தறை தெவிநுவர விஷ்ணு தேவாலயம் மற்றும் கதிர்காம கந்தன் தேவாலயத்திலும்; கஞ்சிபானி இம்ரான் எதிர் தெஹி பாலே மல்லி பாதாள வகையறாக்களின் போட்டிகள் வந்துவிட்டதான பகீர் செய்திகளுக்கு மத்தியில் இலங்கையின் நவீன வரலாற்றின் மிக முக்கிய இருண்ட பக்களில் ஒன்றான கறுப்பு யூலையின் 43 ஆம் ஆண்டு முடிவு நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்துள்ளன.
இந்த கறுப்பு யூலை படுகாலைகளுக்கு மட்டும் அல்லாமல் செம்மணி புதை குழிசார்ந்த படுகொலைகளுக்கும் இதுவரை பொறுப்புக்கூறப்படாத நிலையில் நேற்று செம்மணியில் நின்ற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளில் இருந்த ஒரேயொரு பெண்ணான ஸ்பானிய இராஜதந்திரி கார்மென்மொரேனோ அங்குவைத்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சி அங்கிருந்தோரை நெகிழவைத்தது.
மூத்த இராஜதந்திரியான கார்மென் மொரேனோவின் இந்த செய்கை ராஜதந்திர புறோட்டோகோல்களுக்கு அப்பாற்பட்டதாகபட்டாலும் இது தமிழர்தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் நீதிக்கான தேடலை அங்கீகரிக்கும் ஒருகுறியீட்டு நகர்வும் கூட
அவர் ஸ்பெயினை சேர்ந்தவர் என்பதால் தனது நாட்டின் வரலாற்றில் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ 75 ஆம் ஆண்டுவரை நடத்திய ஆட்சியில் ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இன்றும் அந்த நாட்டை துரத்துவதை அறிந்தவர்.சர்வாதிகாரி பிராங்கோ தன்னை எதிர்த்தவர்களில் பலரை காணாமல் ஆக்கியவர்.
அந்தவகையில் நேற்று செம்மணி புதைகுழிபகுதியில் நின்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவியான கார்மென் மொரேனோவின் இந்த கட்டியணைப்பு ஆறுதல் ஒரு குறியீட்டுநகர்வாக உள்ள நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

