தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த இந்தக் கருத்து குறித்து திமுக எம்.பி. கனிமொழி, “நாட்டின் இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று அழைத்ததிலிருந்து, இப்போது மத்திய பாஜக அரசின் கொடூரமான காவல்துறை வன்முறைக்கு ஆளாகி, தங்கள் உயிருக்காகப் போராடும் இளைஞர்களின் பிரச்சனைகளைக் கேட்க ‘நேரமில்லை’ என்று கூறுவது வரை, இது நம் நாட்டில் நீதியின் நிலையைப் பற்றி என்ன சொல்கிறது? இத்தகைய தீவிரமான விஷயங்களுக்கே உரிய அவசரம் காட்டப்படாவிட்டால், சாதாரண குடிமக்கள் நீதி அமைப்பின் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


