• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கழுத்தை அறுத்துக் கொலை செய்த சுகாதாரப் பணியாளருக்கு மரண தண்டனை

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கழுத்தை அறுத்துக் கொலை செய்த சுகாதாரப் பணியாளருக்கு மரண தண்டனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நபரொருவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசாங்க மருத்துவமனை சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு, வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி இந்திகா அத்தநாயக்க இன்று (22) மரண தண்டனை விதித்தார்.


தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்று கூறினார்.

சுகாதார உதவியாளருக்கே  மரண தண்டனை

அதன்படி, ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும் ஒரு திகதி மற்றும் நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சுயநினைவு திரும்பும் வரை தூக்கில் இடப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கழுத்தை அறுத்துக் கொலை செய்த சுகாதாரப் பணியாளருக்கு மரண தண்டனை | Death Sentence For Healthcare Worker


சுகாதாரத் துறையில் பணிபுரியும், எப்பாவல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.டி. தேவானந்தா என்ற சுகாதார உதவியாளருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்கு


எப்பாவலவில் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் வசித்துவந்த பி. மஹிந்த குமார என்ற ‘பெலிகலா’ என்பவரைக் கொலை செய்ததற்காக, இலங்கை தண்டனைச் சட்டத்தின் 296-வது பிரிவின் கீழ், அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தொடுத்திருந்தார்.

கழுத்தை அறுத்துக் கொலை செய்த சுகாதாரப் பணியாளருக்கு மரண தண்டனை | Death Sentence For Healthcare Worker


தம்புட்டெகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற பூர்வாங்க விசாரணையைத் தொடர்ந்து, இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக அனுராதபுர உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது.


இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்ட ஆலோசகர் யோமாலி நாகொட விதானவும், குற்றவாளி சார்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் பெரேராவும் முன்“னிலையானார்கள்.



அப்போதைய அனுராதபுர போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி எச். ஏ. கருணாதிலக மற்றும் ஒரு குழுவினர் இந்த வழக்கில் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

காவல் துறையினர் காவல் நிலையக் காவலில் ஏற்பட்ட மரணம் மற்றும் சுவாரம் (Suaram) முன்வைத்த துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துகின்றனர். – Malaysiakini

Next Post

களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியை எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? | Vaibhav Sooryavanshi: When and Where to watch the Live streaming of the 1st T20 Match between India and Zimbabwe

Next Post
களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியை எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? | Vaibhav Sooryavanshi: When and Where to watch the Live streaming of the 1st T20 Match between India and Zimbabwe

களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியை எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? | Vaibhav Sooryavanshi: When and Where to watch the Live streaming of the 1st T20 Match between India and Zimbabwe

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin