Last Updated:
வளைகுடா நாடுகளில் உள்ள உட்கட்டமைப்பு மீது ஈரானின் தாக்குதலால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
ஈரான் மீது தொடர்ந்து 10ஆவது இரவாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அமெரிக்கா கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து 10 ஆவது நாளாக, ஈரானின் உட்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் வலிமையைக் குலைக்கும் வரை தாக்குதல் தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, குவைத்தில் உள்ள 3 அமெரிக்க ராணுவத் தளங்கள், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகரப்படை தெரிவித்துள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள உட்கட்டமைப்பு மீது ஈரானின் தாக்குதலால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
ஈரான் மீது தொடர்ந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.. வளைகுடா நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

