அண்மையில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தரவுத்தள உள்கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியுள்ளது.
அண்மையில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமேசானின் “மத்திய தரவு உள்கட்டமைப்பு” மற்றும் அங்குள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈரானில் கட்டுமானத்தில் உள்ள டார்கோவின் (Darkhovin) அணுமின் நிலையம் உள்ளிட்ட சிவில் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும், அமேசான் வசதிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலுக்கு இதுவரை எந்தவிதமான சுயாதீனமான உறுதிப்படுத்தலும் இல்லை. இது குறித்து அமேசான் நிறுவனமோ, பஹ்ரைன் அல்லது அமெரிக்க அதிகாரிகளோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.

