Last Updated:
நீட் வினாத்தாள் மோசடி, இளைஞர்கள் மீதான தாக்குதல் பிரச்னைகளால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கின. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
நீட் வினாத்தாள் மோசடி, இளைஞர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கின.
திங்கள்கிழமை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், முதல் நாளில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், எவ்வித அலுவல் பணிகளும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாவது நாள் நாடாளுமன்றம் கூடியதும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.
குறிப்பாக, மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இரண்டு அவைகளும் முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரினர்.
இதனை தொடர்ந்து அவை 2 மணிக்கு கூடியதும், நாடாளுமன்ற விதிப்படி, பேனர்கள், கருப்பு உடைகளுடம் வரக்கூடாது என கூறிய மக்களவை நடத்திக் கொண்டிருந்த திலீப் சைக்கியா, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதேபோன்று, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Delhi,Delhi,Delhi
July 21, 2026 3:51 PM IST


