• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்கமாட்டேன்! கர்நாடகா காங்கிரஸுக்கு சவால் விட்ட விஸ்வநாதன் | Minister Viswanathan says that he wont allow even a single brick for Mekedatu dam

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்கமாட்டேன்! கர்நாடகா காங்கிரஸுக்கு சவால் விட்ட விஸ்வநாதன் | Minister Viswanathan says that he wont allow even a single brick for Mekedatu dam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Updated: Monday, July 20, 2026, 10:58 [IST]

திருப்பத்தூர்: மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டேன் என திருப்பத்தூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆவேச பேசியுள்ளார்.

திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

mekedatu Viswanathan

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெள்ளி நாணயம், ஊக்கத் தொகையை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது. காவிரி படுகையிலிருந்து வரும் தண்ணீர், கர்நாடகத்தை விட தமிழ்நாட்டிற்குத்தான் முழுச் சொந்தம்.

கர்நாடகம் இதற்குச் சொந்தம் கொண்டாடுவது மாற்றாந்தாய் போன்றது. ஆனால், தமிழ்நாடு இந்த நீரை தாயைப் போலக் கொண்டாடும் உரிமை படைத்தது. இந்த ஓரவஞ்சனையை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கர்நாடகாவிலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது, இருப்பினும், நான் சார்ந்திருக்கும் கூட்டணி அரசாங்கத்தின் காங்கிரஸ் அமைச்சர் என்ற முறையில் தைரியமாகச் சொல்கிறேன்.

மேகதாது அணையில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க நான் அனுமதிக்க மாட்டேன். தமிழ்நாட்டின் இறையாண்மையும், சுயாட்சியும் மக்களின் விருப்பமுமே நமக்கு முக்கியம்.

லஞ்சத்தையும் ஊழலையும் முற்றிலும் ஒழித்துவிட முடியும். ஆனால் ஜனநாயகத்தில் மக்கள் நலன் சார்ந்த ‘சிபாரிசுகளை’ யாரும் புறக்கணித்துவிட முடியாது. சிபாரிசுகள் என்பது தனிநபர் சார்ந்த சுயநலப் பிரச்சனையாக இருக்கக் கூடாது.

அவை நியாயமான, மக்கள் பிரச்சனைகளை உள்ளடக்கிய கோரிக்கைகளாக இருக்க வேண்டும். ஒரு குழுவோ அல்லது அமைப்போ கூட்டு முயற்சியுடன் மக்கள் நலனுக்காக எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என அனைவரும் மதிப்பளித்தே ஆக வேண்டும். இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு, இதுவரையில், அரசு சார்பில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் கல்வியியல் கல்லூரி இல்லையெனவும், அதனை கொண்டு வர வேண்டும் என்று திருப்பத்தூர் சட்டசபை உறுப்பினர் திருப்பதி கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், திருப்பத்தூருக்கு பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகள் வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை நிறைவேற்ற ஏற்பாடுகளை செய்வதாக விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

English summary

Higher Education department Minister Viswanatha aggressively says that he wont allow even a single brick to be placed in Mekedatu to built dam by Karnataka.

Read More

Previous Post

KWAP-இன் ரிம 200 மில்லியன் இழப்பு, தணிக்கை நிறுவனங்களின் மீது மட்டும் சார்ந்து இருப்பது தவறு என்பதை உணர்த்தும் ஒரு பாடமாகும். – Malaysiakini

Next Post

10 நாள் போர் நிறுத்தம்.. மீண்டும் களத்தில் குதிக்கும் பாகிஸ்தான்.. ஈரான் முடிவு என்ன? | Pakistan & Qatar Propose 10-Day Ceasefire as US-Iran War Escalates with $10M Bounty on Trump

Next Post
10 நாள் போர் நிறுத்தம்.. மீண்டும் களத்தில் குதிக்கும் பாகிஸ்தான்.. ஈரான் முடிவு என்ன? | Pakistan & Qatar Propose 10-Day Ceasefire as US-Iran War Escalates with $10M Bounty on Trump

10 நாள் போர் நிறுத்தம்.. மீண்டும் களத்தில் குதிக்கும் பாகிஸ்தான்.. ஈரான் முடிவு என்ன? | Pakistan & Qatar Propose 10-Day Ceasefire as US-Iran War Escalates with $10M Bounty on Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin