கோலாலம்பூர்: ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக கண்டிக்கப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) அதிகாலை செர்டாங் காவல் நிலையம் மீது குடிபோதையில் இரு நபர்கள் மண் பானையை வீசியுள்ளனர். ஒரு அறிக்கையில், செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP A.A.அன்பழகன் காலை 6.30 மணிக்கு நடந்த சம்பவத்தின் போது போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவர் போலீஸ் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தியதாக அவர் கூறினார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் தப்பிச் செல்வதற்கு முன், மோட்டார் சைக்கிளின் பின் அமர்ந்திருந்தவர் ஒரு பானையை வேலியில் வீசினார்.
சம்பவத்தின் நோக்கம் பழிவாங்கல் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் சந்தேக நபர்கள் ஹெல்மெட் அணியாததற்காக சாலைத் தடுப்பில் அன்று காலை கண்டிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஏசிபி அன்பழகன் கூறுகையில், சந்தேக நபர்களை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-8074 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.


