ஒரே ஒருமுறை ஒரு பெரிய அளவிலான தொகையை டெபாசிட் செய்து விட்டால் போதும், அதற்கான வட்டியை தொடர்ந்து கொடுத்து வரும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் ஃபிக்சட் டெபாசிட்களாகும் (FD). ஃபிக்சட் டெபாசிட் மூலமாக கிடைக்கும் வட்டியை மாதா மாதமோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ தேர்வு செய்யும் அனுமதி FD பாலிசி ஹோல்டருக்கு வழங்கப்படுகிறது.
பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்கள் பல்வேறு கால அளவு மற்றும் வட்டி விகிதங்களை கொண்டுள்ளதாக அமைகிறது. 1-வருட, 3-வருட, மற்றும் 5-வருட திட்டங்கள் மிகவும் பிரபலமான ஃபிக்சட் டெபாசிட் ஆப்ஷன்கள். இதில் நீங்கள் 5-வருட FD திட்டத்தில் முதலீடு செய்தால் ஒரு நிதியாண்டில் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான வரி பலன்களை பெற்றுக் கொள்ளும் கூடுதல் சலுகையை பெறுவீர்கள்.
பொது மற்றும் தனியார் வங்கிகளைப் போல, பல்வேறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ஃபிக்சட் டெபாசிட் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இவர்கள் வழங்கும் FD வட்டி விகிதங்கள் பெரும்பாலான வங்கிகளை காட்டிலும் சற்று அதிகமாகவே உள்ளது. முன்னணி NBFC-க்கள் வழங்கும் FD விகிதங்களின் பட்டியலை இப்பொழுது பார்க்கலாம்:
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Unity Small Finance Bank)
அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் NBFC-க்கள் மத்தியில் இந்த NBFC 9 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் 1001-நாள் FD-க்கு 9 சதவீத வட்டி விகிதத்தை கொடுக்கிறது. மேலும் 1-வருட FDக்கு 7.85 சதவீதமும், 3-வருட மற்றும் 5-வருட FDகளுக்கு 8.15 வட்டி விகிதத்தை அளிக்கிறது.
சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Suryoday Small Finance Bank)
இந்த NBFC அதன் இரண்டு-வருட-இரண்டு-நாள் FD க்கு 8.65 சதவீத அதிக வட்டியை வழங்குகிறது. 1-வருட, 3-வருட, மற்றும் 5-வருட FDகளுக்கு முறையே 6.85 சதவீதம், 8.60 சதவீதம், மற்றும் 8.25 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க:
மகாத்மா காந்திக்கு முன்னாள் இந்திய ரூபாய் நோட்டுகளில் யார் யார் படங்கள் இருந்தன தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்!
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Utkarsh Small Finance Bank)
இந்த NBFC அதன் 2-வருட, 3-வருட மற்றும் 1500-நாள் FDகளுக்கு 8.50 சதவீத வட்டியை கொடுக்கிறது. 1-வருட FD-க்கு 8% வட்டியும், 3-வருடம் மற்றும் 5-வருட FD-க்களுக்கு 8.50 சதவீதம் மற்றும் 7.75 சதவீத வட்டியையும் தருகிறது.
உஜ்வைன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Ujjivan Small Finance Bank)
இந்த NBFC அதன் 15 மாத ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் 1-வருட FD-க்கு 8.25 சதவீதமும், 3-வருட மற்றும் 5-வருட FD-க்களுக்கு தலா 7.20 சதவீத வட்டியையும் கொடுக்கிறது.
நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Northeast Small Finance Bank)
இந்த NBFC 555-நாள் மற்றும் 1111-நாள் FDகளுக்கு 8.50 சதவீத அதிக வட்டியை வழங்குகிறது. 1-வருட FD-க்கு 7.75 சதவீத வட்டியும், அதுவே 3-வருட மற்றும் 5-வருட FD-க்களுக்கு முறையே 8 சதவீதம் மற்றும் 6.25 சதவீத வட்டியையும் கொடுக்கிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Jana Small Finance Bank)
இந்த நிதி நிறுவனம் 365-நாள் (1 வருட) FDக்கு 8.50 சதவீத வட்டியை வழங்குகிறது. அதுவே 3-வருடம் மற்றும் 5-வருட FD-க்களுக்கு தலா 7.25% வட்டி வழங்கப்படுகிறது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Equitas Small Finance Bank)
இந்த நிதி நிறுவனம் அதன் 444-நாள் FDக்கு 8.50 சதவீதம் என்ற சிறந்த வட்டியை கொடுக்கிறது. 1-வருட FDக்கு 8.20%, 3-வருடம் மற்றும் 5-வருட FD-க்களுக்கு முறையே 8% மற்றும் 7.25 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)