இந்தியாவில் 112 ஆண்டுகள் பழமையான ரயில் இயக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பிரீமியம் வகுப்பாக இயங்கி வந்த ரயில், தற்போது சாதாரண ரயிலாகவே இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி போன்ற பிரீமியம் வகுப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 112 ஆண்டுகள் பழமையான ரயிலும் இயக்கப்படுகிறது. இது ஒரு காலத்தில் பிரீமியம் வகுப்பில் இயக்கப்பட்டது. மும்பையில் இருந்து பெஷாவர் வரை சுமார் 2,494 கி.மீ. தூரத்தை 47 மணி நேரம் பயணித்தை முடித்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த ரயிலின் பாதை குறைக்கப்பட்டாலும், நிறுத்தப்படவில்லை.
மும்பை மற்றும் பெரோஸ்பூர் கண்டோன்மெண்ட் இடையே இயங்கிவந்த பஞ்சாப் மெயில், ஜூன் 1ஆம் தேதியான இன்றுடன் 112 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. புகழ்பெற்ற ஃபிராண்டியர் மெயிலை விட, இந்த பஞ்சாப் ரயில் 16 ஆண்டுகள் பழமையானது. பஞ்சாப் மெயில் அல்லது பஞ்சாப் லிமிடெட் ரயில் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ரயிலின் சேவை ஜூன் 1, 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
1914ஆம் ஆண்டில் மும்பையில் இருந்து டெல்லி இடையிலான 1,541 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 29 மணி நேரம் 30 நிமிடங்களில் சென்றது. 1920களின் முற்பகுதியில் அதன் நேரம் 27 மணி நேரம் 10 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. 1930களின் நடுப்பகுதியில் பஞ்சாப் மெயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டி சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. 1945ல் பஞ்சாப் மெயிலில் குளிரூட்டப்பட்ட ஸ்லீப்பர் கோச் நிறுவப்பட்டது. 1972ல் மீண்டும் ரயில் 29 மணி நேரம் எடுக்கத் தொடங்கியது.
இதையும் படிக்க:
பிரதமரின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி வேகம் தொடரும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
மும்பையில் இருந்து பெரோஸ்பூர் கண்டோன்மெண்ட் வரையிலான 1,930 கி.மீ. தூரத்தை பஞ்சாப் மெயில் ரயில், 52 ரயில் நிலையங்களில் நிறுத்தி இயக்கப்படுகிறது. சராசரியாக 59 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் மொத்தம் 32 மணி 35 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயிலில் உணவக வசதியும் இருக்கிறது. இந்த ரயிலில் ஆறு பெட்டிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், 3 பெட்டிகளில் மட்டுமே பயணிகள் ஏற முடியும். எஞ்சிய 3 பெட்டிகளில் அஞ்சல் பொருட்கள் மற்றும் தபால்கள் தான் ஏற்றப்படுகின்றன.
1968ஆம் ஆண்டு டீசல் இன்ஜினுடன் ஜான்சி வரை ஓடத் தொடங்கிய இந்த ரயில், பின்னர் டெல்லி வரை ஓடத் தொடங்கியது. 1976ல் பெரோஸ்பூர் வரை ஓடத் தொடங்கியது. இதனிடையே, இந்த ரயில் மின்சார இன்ஜினுடன் ஓடத் தொடங்கியது. கொரோனா பரவல் அதிகரித்தபோது, கடந்த மார்ச் 22, 2020ல் அனைத்து ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டது. மே 1, 2020 மீண்டும் ரயில் சேவை மீண்டும் படிப்படியாக அனுமதிக்கப்பட்டபோது, மீண்டும் இந்த ரயில் டிச.1, 2020 முதல் ஓடத் தொடங்கியது.
.
&w=750&resize=750,375&ssl=1)
