இலைக்காக சாகுபடி செய்யப்படும் வாழைக்கு பூவன் ரகம் மிகவும் ஏற்றதாக உள்ளது. இதேபோல் கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட ரகங்களையும் விவசாயிகள் தேர்வு செய்யலாம். வாழைத்தோட்டத்தைச் சுற்றிலும் அகத்தி, கிளைரிசிடியா போன்ற மரங்களை வரப்பின் உள் வரிசையிலும், சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்களை வெளி வரிசையிலும் நடவு செய்தால், அவை காற்றுத் தடுப்பு அரணாக செயல்படும்.

