வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சந்நதி- கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினருக்கு திருகோணமலை சீனக்குடாவில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் சார்பாக அங்கு சென்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பாதயாத்திரை குழுவின் ஆலோசகருமான உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் வரவேற்பளித்தனர்.
வில்லூன்றிகந்தசுவாமி ஆலயத்தில் தங்கிய அவர்கள் நேற்றுமுன்தினம் (30) சீனக்குடாவை வந்தடைந்தனர்.
கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை நேற்று 22ஆவது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கதிர்காம பாதயாத்திரை பேரவையின் தலைவர் ஜெயாவேல்சாமி தலைமையில் இந்த குழுவினர் வந்து கொண்டிருக்கின்றார்கள் .
மொத்தமாக 89 அடியார்கள் இந்த பாதயாத்திரை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
காரைதீவு குறூப் நிருபர்- வி.ரி.சகாதேவராஜா


