Last Updated:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 365 ரன்களை விளாசி கார்ஃபீல்டு சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 235 விக்கெட்டுகளும், 109 கேட்சுகளையும் கார்ஃபீல்டு பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கார்ஃபீல்டு சோபர்ஸ் காலமானார். அவருக்கு வயது 89. இரண்டு வாரங்களில் தனது 90வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆல் ரவுண்டரான கார்ஃபீல்டு சோபர்ஸ் 1954 முதல் 1974 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதம், 30 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 32 ரன்கள் அடித்துள்ளார். 1958ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 365 ரன்களை விளாசி கார்ஃபீல்டு சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 235 விக்கெட்டுகளும், 109 கேட்சுகளையும் கார்ஃபீல்டு பிடித்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் தேசிய அணியின் கேப்டனாக செயல்பட்ட கார்ஃபீல்டு 6 பந்துகளில் 6 சிக்சர்களையும் விளாசி வியக்க வைத்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கி கவுரவித்தது மட்டுமின்றி சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரையும் நடத்தி வருகிறது.
இரண்டு மகன் மற்றும் வளர்ப்பு மகளுடன் தனது இறுதி காலத்தை கார்ஃபீல்டு கழித்து வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கார்ஃபீல்டு மறைவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


