• Login
Saturday, July 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாஸ்து சரியில்லை.. ரூமை மாற்றணும்.. ஜோசியர் எச்சரிக்கை! முதல்வர் அலுவலகத்தை மாற்றும் விஜய்! | TVK Vijay to change his room and postion in Secretariate according to the Vastu

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வாஸ்து சரியில்லை.. ரூமை மாற்றணும்.. ஜோசியர் எச்சரிக்கை! முதல்வர் அலுவலகத்தை மாற்றும் விஜய்! | TVK Vijay to change his room and postion in Secretariate according to the Vastu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Shyamsundar I

Time
Updated: Friday, July 17, 2026, 13:59 [IST]

சென்னை: முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை மாற்றவிருக்கிறார். இதற்கு பின் வாஸ்து சாஸ்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய்யின் ஜோதிடர் அறிவுரையின் படி அவர் இந்த முடிவை எடுக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மாடியில் முதல்வர் விஜய்யின் அறை மற்றும் அவரது அலுவலகம், முதல்வரின் செயலாளர்கள் 4 பேரின் அறை மற்றும் அலுவலகம் இயங்கி வருகிறது. முதல்வர் விஜய், தனது அலுவலகத்தில் கிழக்கு திசைப் பார்த்து அமர்ந்திருக்கிறார்.

இந்த அலுவலகமும் முதல்வர் அமர்ந்திருக்கும் திசையும் வாஸ்துபடி அமையவில்லை என்கிற ஒரு யோசனையை விஜய்யின் ஜோதிடர் தெரிவித் திருக்கிறார். அதனால், தனது அறையை மாற்றலாமா என்கிற யோசனை விஜய்க்கு இருந்து வந்துள்ளது.

முதல்வர் அமர்ந்திருக்கும் திசையும் வாஸ்துபடி அமையவில்லை

இந்த நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்திருக்கும் 10 அடுக்கு மாளிகையான நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் மாநாட்டு அரங்கம் இருக்கிறது. இங்கு தான் அனைத்துக் கட்சிகள் கூட்டம், கலெக்டர்கள் மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு பெரிய அளவிலான இடம் !

TVK Vijay to change his room and postion in Secretariate according to the Vastu

அண்மையில் கலெக்டர்கள் மாநாடு இந்த அரங்கத்தில் தான் நடந்தது. அப்போதே இதனை கவனித்துள்ளார் முதல்வர் விஜய். அந்த 10-வது மாடியிலி ருந்து பார்த்தால், பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பிரமாண்டமான வங்காள விரிகுடா கடலின் அழகிய காட்சி கண்களுக்கு விருந்தாகும். மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.

கலெக்டர் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்

கலெக்டர் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், இதனை கண்டிரு க்கிறார். இந்த இடம் எப்படி இருக்கிறது என்று ஜோதிடரிடம் ஆலோசனை நடந்திருக்கிறது. அவரும் ஓகே சொன்னதுடன், ”ஆட்சித் தலைமையின் தலைவர் நீங்கள். ஆட்சி புரியும் இடத்தின் உச்சத்தில் நீங்கள் அமர்ந்து ஆட்சி புரியும் போது எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். இன்னும் பல உச்சங்களை நீங்கள் பெறுவீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் ஜோதிடர்.

இதனையடுத்து உயரதிகாரிகளுடன் அடுத்தடுத்த ஆலோசனைகள் நடந்தன. எல்லாமே பாசிட்டிவ்வாக நடந்திருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் விஜய் தொடர்பான மொத்த அலுவலகமும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு இடம்மாறுகின்றன.

முதல்வர் விஜய்யின் அறை

அதாவது, முதல்வர் விஜய்யின் அறை, சி.எம். செக்ரட்டரியேட் என சொல்லப்படக் கூடிய முதல்வரின் செயலகம், முதல்வரின் செயலாளர்களின் அறை மற்றும் அவர்களது அலுவலகத்தினர், முதல்வரின் ஆலோசகர்களின் அறைகள், முதல்வரின் அறையை ஒட்டி மினி கான்ஃபரன்ஸ் ஹால் என உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கியிருக்கிறது. மாற்றம் செய்வதற்கான பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 3 மாதங்களில் இந்த பணிகள் முடியும்

அதிகப்பட்சம் இன்னும் 3 மாதங்களில் இந்த பணிகள் முடிந்து, முதல்வர் விஜய் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நடந்து முடிந்து அனைத்தும் தயாராகி விடும். தயாரானதும் ஒட்டுமொத்த முதல்வரின் அலுவலக அறைகளும் அதன் செயல்பாடுகளும் 10-வது மாடிக்கு இடமாற்றப்படவிருக்கிறது. மூன்று மாதங் களுக்குப் பிறகு, நாமக்கல் கவிஞர் மாளிகையிலிருந்துதான் தனது ஆட்சியை நடத்தவிருக்கிறார் முதல்வர் விஜய் !

– சிறப்பு நிருபர் எழில்

English summary

TVK Vijay to change his room and postion in Secretariate according to the Vastu

Read More

Previous Post

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்: அறிவித்தது CENTCOM

Next Post

பள்ளியின் நற்பெயரை காக்கும் நோக்கில் கொடுமைப்படுத்தல் (Bullying) சம்பவங்களை மறைக்க வேண்டாம் – அன்வார் – Malaysiakini

Next Post

பள்ளியின் நற்பெயரை காக்கும் நோக்கில் கொடுமைப்படுத்தல் (Bullying) சம்பவங்களை மறைக்க வேண்டாம் – அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin