
கடுவலை, நவகமுவ, வெலிஹிந்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடு ஒன்றின் முன்னால் நின்றிருந்த குறித்த இளைஞரை இலக்கு வைத்து, கைத்துப்பாக்கி ஒன்றினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த அவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து நவகமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

