Last Updated:
பெற்றோர் இருவரும் மருத்துவர் என்ற நிலையில், இளநிலை நீட் தேர்வுக்காக தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்ததாக ஆர்யன் குப்தா தெரிவித்துள்ளார்.
தனது 3 வயதில் புற்றுநோயால் பாட்டி உயிரிழந்த போது மருத்துவராக வேண்டும் என்று ஏற்றுக்கொண்ட உறுதி தற்போது, தன்னை நீட் டாப்பராக மாற்றி உள்ளதாக பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுத் தேர்வில் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஆர்யன் குப்தா, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
பெற்றோர் இருவரும் மருத்துவர் என்ற நிலையில், இளநிலை நீட் தேர்வுக்காக தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்ததாக ஆர்யன் குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து புற்றுநோய் நிபுணராக விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், விழுப்புரத்தைச் சேர்ந்த வேங்கடாபதி வேலாயுதம் நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 12 ஆம் இடமும் பிடித்து அசத்தி உள்ளார்.
இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரான மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகன் ஆவார்.
Jul 17, 2026 10:04 PM IST


