உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், அறிவிக்கப்படாத காரணங்களால் அந்நாட்டின் அரசுக்குள் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் யூலியா ஸ்விரைடென்கோ கடந்த செவ்வாய்க் கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்தார். மேலும், சில முக்கிய அமைச்சர்களும் பதவி விலகினர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் அரசின் எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனமான நாஃப்டோகேஸ் நிறுவனத்தின் தலைவரான 48 வயதாகும் செர்ஹி கோரெட்ஸ்கி நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செர்ஹி கோரெட்ஸ்கி பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு உக்ரைனின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உக்ரைனில் குளிர்க்காலம் தொடங்கவுள்ள நிலையில், ரஷ்யா உடனான போருக்கு இடையே எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக பிரதமராக செர்ஜி கோரெட்ஸ்கி நியமிக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
கடந்த 2025 குளிர்காலத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலால் அந்நாட்டின் மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், குளிரில் வாடிய உக்ரைனிய மக்களின் வெப்பமூட்டும் அமைப்புகள் செர்ஜி தலைமையிலான நாஃப்டோகேஸ் நிறுவனத்தின் உதவியுடன் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.(a)

