• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலகையே திரும்பி பார்க்க வைக்கும் டெக்னாலஜி.. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்! மோடி தொடங்கி வைக்கிறார் | PM Narendra Modi Flags Off India First Hydrogen Powered Train Between Jind And Sonipat, Why impt

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உலகையே திரும்பி பார்க்க வைக்கும் டெக்னாலஜி.. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்! மோடி தொடங்கி வைக்கிறார் | PM Narendra Modi Flags Off India First Hydrogen Powered Train Between Jind And Sonipat, Why impt
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Updated: Friday, July 17, 2026, 8:29 [IST]

சண்டிகர்: நாட்டிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் ரயிலை பிரதமர் மோடி இன்றைய தினம் தொடங்கி வைக்கிறார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து தனது சேவையை இந்த ரயில் தொடங்கும். இதன் மூலம் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில்களை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வே பல்வேறு புதுமைகளை கொண்டு வருகிறது. பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல வந்தே பாரத் தொடங்கி பல புதிய ரயில்களும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி இப்போது நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் இன்று பயன்பாட்டிற்கு வருகிறது.

trian India

ஹைட்ரஜன் ரயில்

இந்த ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். செலவு குறைவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கார்பன் எமிஷன் குறைப்பு என பல வழிகளில் இந்த ஹைட்ரஜன் ரயில் முக்கியமானதாக இருக்கும். மேலும், நாட்டின் க்ரீன் எனர்ஜி மற்றும் நெட் ஜீரோ கார்பன் எமிஷன் டார்கெட்டை அடையவும் இது உதவும் என தெரிகிறது.

வடஇந்திய ரயில்களை விட தென்னிந்திய ரயில்கள் சுத்தமாக இருக்க என்ன காரணம்? டிரெண்டாகும் வீடியோ

வடஇந்திய ரயில்களை விட தென்னிந்திய ரயில்கள் சுத்தமாக இருக்க என்ன காரணம்? டிரெண்டாகும் வீடியோ

இந்த திட்டத்திற்காக ஜிந்த் – சோனிபத் ரயில் பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருளை சேமித்து, அதை நிரப்புவதற்காக ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பு மையம் ஜிந்திலில் தான் இருக்கிறது. இதன் காரணமாகவே அங்கிருந்து ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.ஹை பிரஷரில் சேமித்து வைக்கப்படும் ஹைட்ரஜன் கேஸ் ரயிலுக்கு செலுத்தப்படும்!

இந்தியாவுக்கு பெருமை

ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் என்பது அதிநவீன தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்போது ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இன்னுமே தொடக்க நிலையில் தான் உள்ளது. தற்போது ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கி வரும் நிலையில், இந்தியாவும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

எப்படி இயங்குகிறது!

இதில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையிலான கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படும்போது மின்சாரம் உருவாகும் நிலையில், அதுவே ரயிலை இயக்க பயன்படும். இந்த ஒட்டுமொத்த பிராசஸில் ரயில்களில் இருந்து நீராவி மட்டுமே கழிவாக வெளியேறும். இதனால் டீசல் ரயில்களுடன் ஒப்பிடும்போது இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.

ரயில் பயணிகளே உஷார்.. இனி டிஜிட்டல் டிக்கெட் ஸ்கிரீன்ஷாட், PDF காட்டினால் அபராதம்! வந்தது புதிய விதி

ரயில் பயணிகளே உஷார்.. இனி டிஜிட்டல் டிக்கெட் ஸ்கிரீன்ஷாட், PDF காட்டினால் அபராதம்! வந்தது புதிய விதி

ரயிலுக்கான ஹைட்ரஜன் நிரப்பு பணிகளுக்காக பிரத்தியேக ஹைட்ரஜன் கம்பிரஷன் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹைட்ரஜன் கசிவு கண்டறியும் கருவிகள், தீ விபத்து எச்சரிக்கை சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.

உரிய நடவடிக்கை

ரயிலின் பராமரிப்பு பணிகளுக்காக டெல்லி ஷகுர்பஸ்தி பகுதியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் நிரப்பு மையம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்ள பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வழக்கமான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

சென்னை MRTS மெட்ரோவுடன் இணையும் முக்கிய தருணம்.. 6 வாரங்களில் சம்பவம்.. அடியோடு மாறுது

சென்னை MRTS மெட்ரோவுடன் இணையும் முக்கிய தருணம்.. 6 வாரங்களில் சம்பவம்.. அடியோடு மாறுது

இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அது இந்திய ரயிவ்வே துறைக்கு மிக பெரிய வெற்றியாக அமையும். மேலும், எதிர்காலத்தில் பல வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் திட்டங்களுக்கும் இது அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

Prime Minister Narendra Modi to launched India first hydrogen-powered train on the Jind-Sonipat route in Haryana(நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்): All things to know about India First Hydrogen Powered Train.

Read More

Previous Post

கைவரிசை காட்டிய மர்ம நபர்: உரிமையாளர் உருக்கமான வேண்டுகோள் (வீடியோ)

Next Post

Cricket | ரசிகர்களுக்கு டபுள் இல்லை… டிரிபிள் ட்ரீட்… இந்தியா-பாகிஸ்தான் மோதல் – புது ‘ரூட்’ போட்ட ஐசிசி! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
Cricket | ரசிகர்களுக்கு டபுள் இல்லை… டிரிபிள் ட்ரீட்… இந்தியா-பாகிஸ்தான் மோதல் – புது ‘ரூட்’ போட்ட ஐசிசி! | விளையாட்டு போட்டோகேலரி

Cricket | ரசிகர்களுக்கு டபுள் இல்லை... டிரிபிள் ட்ரீட்... இந்தியா-பாகிஸ்தான் மோதல் - புது 'ரூட்' போட்ட ஐசிசி! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin