Last Updated:
யூரியாவிற்கான தேசிய முதலீட்டு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 7 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சரவைக் கூட்டத்தில் உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர்கள், செல்போன் உற்பத்தி, உர உற்பத்தி மற்றும் ரெயில்வே விரிவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
யூரியாவிற்கான தேசிய முதலீட்டு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கங்கை நதிக்கரையோரம் ஆறுவழிச்சாலை, பல்வேறு ரயில் வழித்தட திட்டங்களுக்கும் அனுமதி பெறப்பட்டதாகக் கூறினார்.
இதில் குறிப்பாக ‘யூரியாவிற்கான தேசிய முதலீட்டுக் கொள்கை’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய NIPU-2026 கொள்கை யூரியா ஆலை முதலீடுகளை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


