• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்…! காவல்துறையின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்…! காவல்துறையின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.


குறித்த பாடசாலையின் முன் கார் ஒன்று தீப்பற்றிய சம்பவத்திற்கும் அங்கிருந்த எட்டு வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டு இது குறித்துக் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.


குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த சிறுவன் தான் காரைத் தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனக் காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாடசாலை 

கடந்த ஜூலை மூன்றாம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்...! காவல்துறையின் அறிவிப்பு | No Proof 8 Year Old Burnt Car In Kurunegala



இந்தச் சம்பவத்திற்கு அங்கு நின்ற எட்டு வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்துக் குருணாகல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் எட்டு வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்தக் காரின் அருகே நடந்து சென்றதும் காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை



எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Gallery

இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மெஸ்ஸியின் மாயாஜாலம், மார்டினெஸின் மரணப் பாய்ச்சல்: இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!

Next Post

உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி – மத்திய அமைச்சரவை ஒப்புதல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி – மத்திய அமைச்சரவை ஒப்புதல் | India News (இந்தியா செய்திகள்)

உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி - மத்திய அமைச்சரவை ஒப்புதல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin