• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருகிறது 10 கிலோ சிலிண்டர்.. மத்திய அரசின் புதிய முயற்சி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? | Good News! 10 kg Commercial LPG Cylinders May Soon Be Launched

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வருகிறது 10 கிலோ சிலிண்டர்.. மத்திய அரசின் புதிய முயற்சி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? | Good News! 10 kg Commercial LPG Cylinders May Soon Be Launched
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வருகிறது 10 கிலோ சிலிண்டர்.. மத்திய அரசின் புதிய முயற்சி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. தள்ளுவண்டி கடை மற்றும் ரோட்டோரங்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் சிலிண்டர்கள் கனமாக இருப்பதால் கையாளுவதற்கு ஏற்றவாறு இல்லை. எனவே அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கும், வணிகப் பயன்பாட்டிற்கும் 10 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

கடை நடத்துபவர்கள் சிரமப்பட்டு இந்த 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை பயன்படுத்தும் போது நீண்ட நாட்களுக்கு கேஸ் பிரச்சனை இருக்காது என்றாலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு சற்று சிரமமாகவே இருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் 10 கிலோ கொண்ட காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பணிக்காக அவ்வப்போது இடமாற்றம் செய்பவர்களுக்கு இந்த சிலிண்டர்கள் மிகவும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிறது 10 கிலோ சிலிண்டர்.. மத்திய அரசின் புதிய முயற்சி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக எல்பிஜி சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சூழலில் 5 கிலோ மற்றும் 2 கிலோ சிலிண்டர்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். அடையாள ஆவணங்களை வழங்கி அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் மூலமாகவே இந்த குட்டி சிலிண்டர்களை பெற முடியும். ஆனால் நுகர்வோரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எண்ணெய் நிறுவனங்கள் தற்போது 10 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை அறிமுகம் செய்ய ஆலோசித்து வருகிறது.

ஹை டென்சிட்டி பாலிஎதிலீன் காம்போசிட் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 10 கிலோ சிலிண்டர்கள் தயாராக இருக்கிறது. இந்த சிலிண்டர்கள் வழக்கமாக நாம் பயன்படுத்தும் சிலிண்டரின் எடையைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவான எடையைக் கொண்டிருக்கும். எனவே கையாளுவதற்கும் எளிதாக இருக்கும்.

லைட் வெயிட்டாக இருப்பதால் குறுகிய படிக்கட்டிலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். அதேபோல சிலிண்டரின் வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு எரிவாயு இருக்கிறது என்பதை நுகர்வோரால் பார்க்க முடியும். இதனால் சரியான நேரத்தில் ரீபில் செய்து கொள்ள முடியும். ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் போது திடீரென சிலிண்டர் தீர்ந்து போகும் பிரச்சனையும் குறையும். பத்து கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலை என்ன? எப்போது முதல் நுகர்வோருக்கு கிடைக்கும் என்ற விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.

Share This Article

Story first published: Wednesday, July 15, 2026, 16:30 [IST]

Other articles published on Jul 15, 2026

Read More

Previous Post

9வது முறை.. யமாலிடம் மீண்டும் மீண்டும் தோற்கும் எம்பாப்பே.. உலகக்கோப்பையை அதிரவிடும் 19 வயது வீரர்! | Lamine Yamal: Lamine Yamal is the Nightmare for Kylian Mbappe, because 19 year old defeats for the 9th Time in 11 Meetings

Next Post

குடிபோதையில் அண்டை வீட்டாரைத் தாக்கிய நபர் கைது

Next Post

குடிபோதையில் அண்டை வீட்டாரைத் தாக்கிய நபர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin