• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Sensex 9.37% சரிவு.. பங்குச்சந்தையில் பணம் போட்டவர்கள் கதி அவ்வளவு தானா..? வரலாறு கொடுக்கும் டிவிஸ்ட்! | Sensex Crashes 9.37% until July 15, 2026 – Should You Panic or Buy the Dip? Historical Lessons for Indian Investors

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Sensex 9.37% சரிவு.. பங்குச்சந்தையில் பணம் போட்டவர்கள் கதி அவ்வளவு தானா..? வரலாறு கொடுக்கும் டிவிஸ்ட்! | Sensex Crashes 9.37% until July 15, 2026 – Should You Panic or Buy the Dip? Historical Lessons for Indian Investors
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sensex 9.37% சரிவு.. பங்குச்சந்தையில் பணம் போட்டவர்கள் கதி அவ்வளவு தானா..? வரலாறு கொடுக்கும் டிவிஸ்ட்!

ஈரான் போர், ஏஐ அதிரடி, ரூபாய் – டாலர் மதிப்பு தடுமாற்றம், டிரம்ப்-ன் திடீர் கொள்கை முடிவுகள், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் (Sensex) குறியீடு கடந்த 6 மாதம் 15 நாட்களில் 9.39 சதவீதம் குறைந்து சுமார் 8000 புள்ளிகளை இழந்துள்ளது. இதனால் பங்குச்சந்தையில் பணத்தை போட்ட சிறு, குறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் பெரும் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர்.

அதாவது பல வருடங்களாக முதலீடு செய்து சேர்த்து வைத்த லாபம் இந்த வருடம் வர்த்தகத்தில் மொத்தமாக இழந்துவிடுவோமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதேபோல் இன்னும் சிலர் சந்தை குறைந்தை முதலீட்டு வாய்ப்பாக கருதினாலும் எப்போது Bounce Back ஆகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Sensex 9.37% சரிவு.. பங்குச்சந்தையில் பணம் போட்டவர்கள் கதி அவ்வளவு தானா..? வரலாறு கொடுக்கும் டிவிஸ்ட்!

ஆனால் தற்போதைய சந்தை நிலையில் எதையும் கணிக்க முடியவில்லை என்பது தான் உண்மை, ஒருப்பக்கம் மலைப்போல் நம்பியிருந்த ஏஐ மற்றும் செமிகண்டக்டர் பங்குகள் சர்ரென சரிய துவங்கி வருகிறது, இதனால் தென் கொரிய பங்குச்சந்தை மோசமான நிலையை எட்டியுள்ளது.

மறுப்புறம் பாதுகாப்பான முதலீடாக திகழ்ந்த தங்கம் வெள்ளி ஈரான் போர் துவங்கிய நாளில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் எந்த பக்கம் செல்வது, எதில் முதலீடு செய்வது என்பதில் பெரும் குழப்பத்திற்கு மத்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் பங்குச்சந்தையின் வரலாற்று போக்கை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது, இந்த வரலாற்று தரவுகள் தான் இந்திய சந்தைக்கு எந்த அளவுக்கு Bounce Back கொடுக்கும் திறன் உள்ளது என்பதை காட்டும்.

அப்படி பண்ட்ஸ்இந்தியா ரிசர்ச் வெளியிட்டுள்ள தரவுகள் படி 1980 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சதவீதம் சென்செக்ஸ் குறியீடு உச்சத்தில் இருந்து கீழே சரிந்துள்ளது. இதேபோல் 1980 முதல் 2026 ஜூன் வரையிலான 46 ஆண்டுகளில் 37 முறை சென்செக்ஸ் லாபகரமாக முடிந்துள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீட்டில் ஏற்படும் சரிவு என்பது வெறும் தற்காலிகமானது தான் என்பதை உணர்த்துகிறது.

அடுத்தக்கட்டமாக லாபம் பதிவான 37 ஆண்டுகளில் சென்செக்ஸ் இன்டரா இயர் நிலையில் 10-20 சதவீதம் வரையில் குறைந்து அதன் பின்பு வர்த்தக முடிவில் லாபத்தை பதிவு செய்துள்ளது. 46 ஆண்டு வரலாற்று தரவுகளில் மீதமுள்ள 9 ஆண்டுகளில் 20 சதவீதம் வரையில் கரெக்ஷன் பதிவாகியுள்ளது முக்கிய பென்ச்மார்க் ஆக உள்ளது. இதேபோல் 30 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு என்பது ஒவ்வொரு 7-10 வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது.

ஆனால் இந்த 20 சதவீதம் சரிவு, 30 சதவீதம் சரிவு என்பது எல்லாமல் வரலாற்றின் முக்கியமான காலக்கட்டத்தில் நடந்தவை, உதாரணமாக ஹர்ஷத் மேத்தா மோசடி, டாட் காம் பபுள், சர்வதேச நிதியியல் நெருக்கடி, கோவிட் பெரும்தொற்று, உள்நாட்டு போர் காலக்கட்டத்தில் நிகழ்ந்தவை. ஆயினும் ஒவ்வொரு முறையும் இந்திய சந்தை சரிவில் இருந்து மீண்டு வருவதை காட்டியுள்ளது.

இப்படியிருக்கையில் பங்குச்சந்தையில் பணம் போட்டவர்கள், பணம் போடுபவர்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது, புரிந்துக்கொள்ள வேண்டியது ஓன்று தான்.

பங்கு விலை அதிமாக இருந்தாலும் சரி சரியான நிதிநிலை, வர்த்தகம், வருவாய் கொண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து நீண்ட காலம் முறையில் முதலீடு செய்ய வேண்டும். இதேபோல் ரிஸ்க் எடுக்க திட்டமிட்டு மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்தாலும் Fundamentals உறுதி செய்துக்கொண்டு முதலீடு செய்யுங்கள்.

இறுதியாக சென்செக்ஸ் குறியீடு பதிவு செய்துள்ள இந்த 9.37 சதவீத சரிவு என்பது தற்காலிகமானது மட்டுமே.

Share This Article

English summary

Sensex Crashes 9.37% until July 15, 2026 – Should You Panic or Buy the Dip? Historical Lessons for Indian Investors

Sensex Crashes 9.37% – Should You Panic or Buy the Dip? Historical Lessons for Indian Investors

Story first published: Wednesday, July 15, 2026, 17:41 [IST]

Other articles published on Jul 15, 2026

Read More

Previous Post

என்ன ஆட்டம் ஆடுனா.. ஒருபக்கம் PoK… இன்னொரு பக்கம் பலூசிஸ்தான்! உள்ளுக்குள் கொதிக்கும் பாகிஸ்தான்! | Pakistan Crisis Deepens: Protests Intensify in PoK, Baloch Activists Renew Independence Demand

Next Post

மானியமில்லா RON95 விலை 5 சென் உயர்வு, டீசல் விலை 10 சென் உயர்வு | Makkal Osai

Next Post
மானியமில்லா RON95 விலை 5 சென் உயர்வு, டீசல் விலை 10 சென் உயர்வு | Makkal Osai

மானியமில்லா RON95 விலை 5 சென் உயர்வு, டீசல் விலை 10 சென் உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin