Last Updated:
மிக்சரை சிறுவன் முகமது ரிஸ்வான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதில் இருந்த நிலக்கடலையை விழுங்கியதாக தெரிகிறது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் மூச்சுக் குழாயில் நிலக்கடலை சிக்கி 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலப்புரம் மாவட்டம் குன்னும்புரம் அடுத்த வெல்லகடம் பகுதியைச் சேர்ந்த முனீர் – பர்சினா தம்பதியின் 2 வயது மகன் முகமது ரிஸ்வான். கடந்த திங்கட்கிழமை காலை சிறுவன் முகமது ரிஸ்வானுக்கு சாப்பிடுவதற்காக பெற்றோர் மிக்சர் வழங்கி உள்ளார்.
மிக்சரை சிறுவன் முகமது ரிஸ்வான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதில் இருந்த நிலக்கடலையை விழுங்கியதாக தெரிகிறது. நிலக்கடலை மூச்சுக் குழாயில் சிக்கிக் கொண்ட நிலையில் சிறுவன் முகமது ரிஸ்வான் மூச்சு விட கடுமையாக சிரமத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் இருவரும் சிறுவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


