Last Updated:
வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்திவிடுமோ என்ற அச்சம் சாமானியர்கள் மத்தியில் நிலவி வருவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
நாட்டின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மக்களின் வலிகளை பற்றி பிரதமர் மோடி எப்போது வாய் திறப்பார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 4 புள்ளி மூன்று எட்டு விழுக்காடாக அதிகரித்துள்ளது.கடந்த ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த 2024 ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்ட புதிய கணக்கீட்டு முறையின் கீழ் சில்லறை பணவீக்கம் 4 விழுக்காட்டை கடப்பது இது முதன் முறையாகும். மேலும், சில்லறை பணவீக்கத்தை 4 சதவிகித அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் இலக்கையும் மீறி உள்ளது.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் பாஜக ஆட்சியின் கீழ், விலைவாசி உயர்வு நடுத்தர குடும்பங்களின் நிதிநிலையை கடுமையாக சீர்குலைத்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
மேலும், வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்திவிடுமோ என்ற அச்சம் சாமானியர்கள் மத்தியில் நிலவி வருவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்தகைய சூழலில், பிரதமர் மோடி எப்போது மக்களின் வலிகள் குறித்து வாய் திறப்பார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் வினவியுள்ளார்.
18 மாதங்களில் இல்லாத உச்சத்தில் பணவீக்கம்: பிரதமர் மோடி எப்போது மௌனம் கலைப்பார்? – காங்கிரஸ் கேள்வி


