முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பினால், அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவார் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத் இஸ்லாம் கூறினார்.
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்காக ஹசீனா சிறையில் அடைக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.
மரண பயமின்றி ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த வருடம் நாட்டிற்கு திரும்ப விருப்பம்
முன்னதாக, என்.டி.டி.வி-க்கு அளித்த ஒரு பிரத்யேகப் பேட்டியில், இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கதேசத்திற்குத் திரும்ப விரும்புவதாக ஷேக் ஹசீனா கூறியிருந்தார்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹசீனாவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த வங்கதேசத்திற்கான சர்வதேசத் தீர்ப்பாயம், கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பிச்சென்று அங்கு வாழ்ந்து வருகின்றமை கறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

