• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்… ‘ஜனநாயகன்’ டிரெய்லருடன் ரிலீஸ் அப்டேட் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்… ‘ஜனநாயகன்’ டிரெய்லருடன் ரிலீஸ் அப்டேட் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். அரசியல் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் கலந்த இந்த திரைப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சென்சார் பணியில் தாமதம்

முதலில் பொங்கல் வெளியீடாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம், பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) சான்றிதழ் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் சில காட்சிகளை நீக்கவும், சிலவற்றை மாற்றியமைக்கவும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஜூலை 24-ல் வெளியாகுமா?

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிரெய்லர் கட் தயாராகிறது

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் தொடர்பாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய டிரெய்லர் கட் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதி அறிவிப்புடன் இந்த டிரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Previous articleபத்து ஃபெரிங்கி கடற்கரையை பாதுகாக்க 5 லட்சம் ரிங்கிட்டில் அவசரத் தடுப்பரண்: பினாங்கு அரசு அதிரடி நடவடிக்கை!
tamiltamil



Read More

Previous Post

PNB Home Loan | PNB-ல் ரூ.50 லட்சம் வீட்டு கடன் பெற எவ்வளவு சம்பளம் வேண்டும்? EMI கணக்கீடு இதோ! | வணிகம் போட்டோகேலரி

Next Post

Tamilmirror Online || 5,386 ’சாம்பூ’ பக்கெட்டுகள் மீட்பு

Next Post
Tamilmirror Online || 5,386 ’சாம்பூ’ பக்கெட்டுகள் மீட்பு

Tamilmirror Online || 5,386 ’சாம்பூ’ பக்கெட்டுகள் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin