ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒமான் கடல் எல்லை
‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) ஆகிய இரு கப்பல்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
ஒமான் கடல் எல்லைக்குள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பல்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல்களால் இரண்டு டேங்கர் கப்பல்களுக்கும் பொருள் சேதம் ஏற்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“அப்பட்டமான தாக்குதல்” என்று கண்டித்ததோடு, “இதற்கு பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையையும் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளது” என்றும் கூறியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

