எச்.ஐ.வி தொற்றை முற்றாக குணப்படுத்த முடியாது என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பைப் பெற வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் சத்யா ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
2023ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் ஏற்கெனவே உயர்வாகக் காணப்படுகின்றன.
பெண்களை விட ஆண்களிடையே அதிகளவான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் ஊசிகளைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை இந்தத் தொற்றுப் பரவுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
எச்.ஐ.வி தொற்றை முற்றாக குணப்படுத்த முடியாது என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பைப் பெற வேண்டியது அவசியமாகும்.
இதைக் கட்டுப்படுத்தவும், முன்கூட்டியே கண்டறியவும் தேசிய எச்.ஐ.வி/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (National STD/AIDS Control Programme) கொழும்பு மற்றும் கம்பஹாவில் விசேட நடமாடும் கிளினிக் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் இலவச மற்றும் இரகசியமான பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான பாதிப்பையே கொண்டிருந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.

