• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஈரானால் இனி எழும்ப முடியாதா? 140 இடங்களை டார்கெட் செய்து அடித்த அமெரிக்கா! எல்லாமே முக்கிய இலக்கு | US attacks on Iran and hits 140 targets including anti ship military network

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஈரானால் இனி எழும்ப முடியாதா? 140 இடங்களை டார்கெட் செய்து அடித்த அமெரிக்கா! எல்லாமே முக்கிய இலக்கு | US attacks on Iran and hits 140 targets including anti ship military network
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Sunday, July 12, 2026, 11:43 [IST]

டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3வதுமுறையாக ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதலை நடத்தி உள்ளது. அதன்படி ஈரான் கடற்படையின் பல்லை பிடுங்கி வலுவை குறைக்கும் வகையில் மொத்தம் 140 இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சரக்கு கப்பல்களை தாக்குவதாக கூறி அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.
கடந்த 7 நாட்களில் 2 முறை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இன்று 3வது முறையாக அமெரிக்கா புதிய தாக்குதலை தொடங்கியது.

us-attacks-on-iran-and-hits-140-targets-including-anti-ship-military-network

ஹார்முஸ் ஜலசந்தியில் ‘சைப்ரஸ்’ நாட்டின் கொடியுடன் பயணித்த எம்/வி ஜிஎஃப்எஸ் கேலக்ஸி எனும் கண்டெய்னர் கப்பல் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா கோபமடைந்தது. அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் ஆத்திரம் தாங்காத அமெரிக்கா, ஈரான் மீது புதிய தாக்குதலை தொடங்கியது. அதன்படி தற்போது ஈரானின் 140 இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரானில் உள்ள போர் விமானங்களை கண்காணிக்கும் ரேடார் அமைப்புகள், ஏவுகணை சேமிப்பு குடோன்கள், ட்ரோன் சேமிப்பு குடோன்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அனுப்ப பயன்படும் தளங்கள் மற்றும் சரக்கு கப்பல்களை தாக்க ஈரான் பயன்படுத்தும் இடங்கள் உள்பட 140 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை அமெரிக்காவின் CENTCOM உறுதி செய்துள்ளது.

CENTCOM என்பது மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா சார்பில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் கட்டளை மையமாகும். ஈரான் மீதான புதிய தாக்குதல் பற்றி CENTCOM கூறியுள்ளதாவது: ”போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் 140 இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், வெடிமருந்து சேமிப்பு குடோன்கள், தகவல் தொடர்பு மையங்கள், கடல்சார் போக்குவரத்தை கண்காணிக்கும் ரேடார் மையங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை குறைக்கவும், ஈரானின் கடல்சார் தாக்குதலுக்கான வலிமையை குறைப்பதை நோக்கமாக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைமைத் தளபதியின் உத்தரவின் பேரில் இந்த வாரத்தில் 3வது தாக்குதலை நாங்கள் நடத்தி உள்ளோம். இந்த 3 தாக்குதல்களின் வழியாக மொத்தம் ஈரானின் 300 இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.

English summary

US attacks on Iran: US launched an attack on Iran-marking the third such strike in just one week. Amidst these attacks, which targeted a total of 140 targets with the aim of crippling the Iranian Navy’s capabilities, startling details regarding the background of these operations have come to light.

Read More

Previous Post

பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Next Post

பெரம்பூர் மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது | Makkal Osai

Next Post
பெரம்பூர் மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது | Makkal Osai

பெரம்பூர் மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin