பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் இந்த பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அரசு ட்ரோன் கட்டுப்பாடு, சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதிக வெப்பம்
இந்தநிலையில் அதிக வெப்பம் காரணமாக ஈபிள் கோபுரம் முன்கூட்டியே மூடப்படுவதுடன் காட்டுத்தீ அபாயத்தால் காடுகள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் புகைபிடிக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் போன்ற முக்கிய நகரங்களில் கவனத்தைத் திசைதிருப்பி திருடும் கும்பல்கள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனவே கனேடியர்கள் பாஸ்போர்ட்டைப் பாதுகாப்பாக வைக்கவும் அதன் நகலை அறையில் வைக்கவும் மற்றும் அதிக ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

