• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: தஜிகிஸ்தானுடன் மோதும் இந்தியா! பரப்புரையை தொடங்குகிறார் வெளியுறவு அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: தஜிகிஸ்தானுடன் மோதும் இந்தியா! பரப்புரையை தொடங்குகிறார் வெளியுறவு அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 13, 2026 3:55 PM IST

பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக வெற்றி பெற, தேர்தல் நடக்கும் நாளில் பதிவாகும் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற வேண்டும்

அமைச்சர் ஜெய்சங்கர்
அமைச்சர் ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தற்காலிக உறுப்பினர் பொறுப்பை கைப்பற்றுவதற்கான தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தை இந்தியா இன்று முறைப்படி தொடங்குகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த பயணத்தின் போது அவர் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸையும் சந்தித்துப் பேசுகிறார்

ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரே ஒரு தற்காலிக இடத்திற்காக இந்தியா இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் இந்தியாவின் நேரடிப் போட்டியாளராக தாஜிகிஸ்தான் களம் இறங்கியுள்ளது. 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), தாஜிகிஸ்தானுக்கு ஏற்கனவே தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இந்தத் தேர்தல் இந்தியாவின் தூதரகத் திறமைக்கு ஒரு முக்கிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இந்தியாவுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிஜி, இலங்கை மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இது தவிர ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் ஆதரவையும் பெற இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் தேர்தல்களில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு வலுவான மற்றும் வெற்றிகரமான பின்னணி உள்ளது. இந்தியா இதுவரை 8 முறை (1950–51, 1967–68, 1972–73, 1977–78, 1984–85, 1991–92, 2011–12 மற்றும் 2021–22) தற்காலிக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளது. குறிப்பாக, 2011–12 தேர்தலில் மொத்தம் உள்ள 190 வாக்குகளில் 187 வாக்குகளையும், கடந்த 2021–22 தேர்தலில் 193 வாக்குகளில் 184 வாக்குகளையும் பெற்று இந்தியா மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில், சர்வதேச உறவுகளில் பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுப்பது, கடல்சார் வழித்தடங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வது, மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்துவது ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தவுள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக வெற்றி பெற, தேர்தல் நடக்கும் நாளில் பதிவாகும் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு (2027) ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: தஜிகிஸ்தானுடன் மோதும் இந்தியா! பரப்புரையை தொடங்குகிறார் வெளியுறவு அமைச்சர்

Read More

Previous Post

மயக்க ஊசிபோட்ட பெண் போராளி கடத்தப்பட்ட கருணா அணி முக்கியஸ்தர்

Next Post

Egg Price | சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Next Post
Egg Price | சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Egg Price | சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin