ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது.
இந்த நேரத்தில், ஈரானில் உள்ள “ஹம்ஷஹ்ரி’ என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குறி வைத்துள்ள உலகத் தலைவர்கள் என சிலரின் பெயரை குறிப்பிட்டுள்ளது. இதில் 13 உலக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் யார் யார்?
1. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
2. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
3. பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர்

4. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ
5. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்
6. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
7. இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி
8. ஜெர்மன் சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ்
9. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ
10. CENTCOM தளபதிகள் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா / பிராட் கூப்பர்
11. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ்
12. இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிதியோன் சார்
13. பொதுப் பணியாளர் படைத் தலைவர் இயல் ஜமீர்
