• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PF கணக்கு இருந்தா ஜாக்பாட்!! இன்னும் 2 நாள்ல அக்கவுண்ட்ல பணம் ஏற போகுது..!! | EPFO to Credit 8.25% PF Interest by July 15: How EPF Interest Is Actually Calculated

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
PF கணக்கு இருந்தா ஜாக்பாட்!! இன்னும் 2 நாள்ல அக்கவுண்ட்ல பணம் ஏற போகுது..!! | EPFO to Credit 8.25% PF Interest by July 15: How EPF Interest Is Actually Calculated
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


PF கணக்கு இருந்தா ஜாக்பாட்!! இன்னும் 2 நாள்ல அக்கவுண்ட்ல பணம் ஏற போகுது..!!

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 15ஆம் தேதி முதல் உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தின் அளவு அதிகரிக்க போகிறது.

இந்தியாவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வு கால நிதிபாதுகாப்பை வழங்கவே பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊழியர் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதம் தோறும் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த பணத்தில் அரசு சார்பாக ஆண்டுக்கு 8.25% வட்டியும் வழங்கப்படுகிறது. காம்பவுண்டிங் முறையில் இந்த பணம் வளர்ச்சி அடைந்து ஓய்வு காலத்தில் பெரிய நிதியாக கைக்கு கிடைக்கும்.

PF கணக்கு இருந்தா ஜாக்பாட்!! இன்னும் 2 நாள்ல அக்கவுண்ட்ல பணம் ஏற போகுது..!!

அந்த வகையில் 2025-26 நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டி தொகையை, வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது. EPFO-வில் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, ஆனால் அது நிதியாண்டின் இறுதியில் தான் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனை பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு மாதமும் உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள மாதாந்திர பேலன்ஸ் தொகை அடிப்படையிலேயே வட்டி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஜூலை மாதம் உங்கள் கணக்கில் 1,00,000 ரூபாய் இருந்தால் அந்த பணத்திற்கு வட்டி கணக்கிடப்படும், அடுத்த மாதம் 1,02,600 ரூபாய் இருந்தால் அதற்கு வட்டி கணக்கிடப்படும். ஆனால் இந்த பணம் மொத்தமாக ஆண்டு இறுதியில் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்தியாவின் நிதியாண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் என்பதால் அந்த மாதங்களுக்கு தான் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு 8.25% என நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை, 12 மாதங்களால் வகுத்து, ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்தனியாக வட்டி கணக்கிடப்படுகிறது. அதற்கான ஃபார்முலா இது தான்.

மாதாந்திர வட்டி = பிஎஃப் பேலன்ஸ் × ஆண்டு வட்டி விகிதம்÷ 12

(Monthly Interest = Opening EPF Balance × Annual Interest Rate ÷ 12)

அப்படி என்றால் சராசரியாக உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு மாதம் தோறும் 0.688% வட்டி கிடைக்கிறது. வட்டி தொகை வரவு வைக்கப்பட்டதும், அந்த தொகை அடுத்த நிதியாண்டின் தொடக்க இருப்பு தொகையுடன் (Opening Balance) கூட்டப்பட்டு, அதன் பிறகு அதற்கும் வட்டி கணக்கிடப்படும். இப்படி தான் கூட்டு வட்டி முறையில் பிஎஃப் பணம் பெருகுகிறது.

உங்கள் பி.எஃப் கணக்கில் நீண்ட நாட்களாக பங்களிப்பு செய்யாமல் இருந்தாலும் அந்த கணக்கில் இருக்கும் பணத்திற்கும் வட்டி கிடைக்கும் என்கிறது ஈபிஎஃப்ஓ அமைப்பு. அதாவது வேலையை விட்டவர்கள் பிஎஃப் பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தாலும் அந்த பணமும் வட்டி சம்பாதித்து கொடுக்கும்.

இந்த ஆண்டுக்கான வட்டி 15ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு, தங்கள் பி.எஃப் கணக்கின் பாஸ்புக்கை சரிபார்த்து, வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். EPFO-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது UMANG செயலி மூலம் இந்த விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Share This Article

English summary

EPFO to Credit 8.25% PF Interest by July 15: How EPF Interest Is Actually Calculated

PF கணக்கு இருந்தா ஜாக்பாட்!! இன்னும் 2 நாள்ல அக்கவுண்ட்ல பணம் ஏற போகுது..!! – EPFO has approved 8.25% interest for FY 2025-26, and the crediting process is expected around July 2026, but the actual interest amount is calculated month by month on the running PF balance, not as a simple yearly lump sum.

Story first published: Monday, July 13, 2026, 9:36 [IST]

Other articles published on Jul 13, 2026

Read More

Previous Post

கோல் போட மிஸ் செய்த என்னை கொலை செய்துவிடுவார்கள்.. உயிருக்கு பயந்து தலைமறைவான கொலம்பிய வீரர்! | fifa world cup: Death Threats Force Colombian Star Jaminton Campaz into Hiding After World Cup Miss

Next Post

பொதுமக்கள் போல் சென்று ஆய்வு செய்த போக்குவரத்துறை மந்திரி – வசமாக சிக்கிய நடத்துனர்,ஓட்டுநர் | Makkal Osai

Next Post
பொதுமக்கள் போல் சென்று ஆய்வு செய்த போக்குவரத்துறை மந்திரி – வசமாக சிக்கிய நடத்துனர்,ஓட்டுநர் | Makkal Osai

பொதுமக்கள் போல் சென்று ஆய்வு செய்த போக்குவரத்துறை மந்திரி - வசமாக சிக்கிய நடத்துனர்,ஓட்டுநர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin