• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் – நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம்

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் – நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து தாக்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி காயமடைந்த அதிகாரி ஒருவரே தனது திகில் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

பயங்கரமான சம்பவம்


அவர் மேலும் தெரிவிக்கையில்,

5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும்.

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம் | Prison Officer Who Critical Injuries During Riots


அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம்.


அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும்.

டெங்கு காய்ச்சல்

இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான்.


அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை.

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம் | Prison Officer Who Critical Injuries During Riots


இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது.

டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை  போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது. இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.

கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர்.  நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர்.

பிணைக் கைதி



முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர்.


அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது.

சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன.

அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள்.



மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன்.

அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.

பேய்களைப் போல 

சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர்.

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம் | Prison Officer Who Critical Injuries During Riots



உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை.

அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள்.

என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள்.

சேர் நீங்கள் வராதீர்கள்

முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம் | Prison Officer Who Critical Injuries During Riots

“சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்” சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர்.


இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்” என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். “சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்” என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது.

கழுத்தில் அமுக்கினர்


அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள்.

எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது.

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம் | Prison Officer Who Critical Injuries During Riots

அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது.


அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் ” ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள்.

அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர்.


எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை. இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

உணவகத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட இரு இளம்பெண்கள் கைது! | Makkal Osai

Next Post

தாய்லாந்து பாரில் சோகம்.. நள்ளிரவில் ஏற்பட்ட கோர தீ விபத்து.. 27 பேர் உயிரிழப்பு.. 63 பேர் படுகாயம்! | Thailand Pub Fire: 27 Dead, 63 Hurt After Massive Blaze in Bangkok

Next Post
தாய்லாந்து பாரில் சோகம்.. நள்ளிரவில் ஏற்பட்ட கோர தீ விபத்து.. 27 பேர் உயிரிழப்பு.. 63 பேர் படுகாயம்! | Thailand Pub Fire: 27 Dead, 63 Hurt After Massive Blaze in Bangkok

தாய்லாந்து பாரில் சோகம்.. நள்ளிரவில் ஏற்பட்ட கோர தீ விபத்து.. 27 பேர் உயிரிழப்பு.. 63 பேர் படுகாயம்! | Thailand Pub Fire: 27 Dead, 63 Hurt After Massive Blaze in Bangkok

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin