Last Updated:
பலத்த காற்றுடன் பெய்த மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாவி (bavi) புயலின் தாக்கத்தால் சீனாவின் ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் உருவான ‘பவி’ புயல், மணிக்கு 200 கிலோ மீட்டர் அதிவேக சூறாவளிக் காற்றுடன் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இதன் காரணமாக, சீனாவின் கடற்கரையோர நகரங்களான புஜியன், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், பாவி புயல் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் நகரில் நேற்றிரவு 11 மணியளவில் கரையைக் கடந்தது. அப்போது வினாடிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை கொட்டியது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கிங்ஜியாங் நகரில் இரண்டாவது முறையாக புயல் கரையை கடந்தது.
பலத்த காற்றுடன் பெய்த மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் சீனாவின் தென்பகுதியில் கரையைக் கடந்த மேசாக் புயலைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில் சீனாவை இரண்டாவது புயல் தாக்கியது கவனிக்கத்தக்கது.


