Last Updated:
omar abdullah : தனது கட்சி எம்.எல்.ஏ ஒருவரை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் ரகசியமாக அணுகி, கட்சி மாறுவதற்காக 20 முதல் 30 கோடி ரூபாய் பணம், அமைச்சர் பதவி மற்றும் மாநில அந்தஸ்து தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாக ஓமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மொத்தம் 95 எம்.எல்.ஏ. இடங்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், நேஷனல் கான்ஃபரன்ஸ் தலைமையிலான கூட்டணி 52 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பலமாக உள்ளது.
மறுபுறம், 29 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவும், இதர சில கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சியாக இருக்கின்றன.
இந்நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏ ஒருவரை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் ரகசியமாக அணுகி, கட்சி மாறுவதற்காக 20 முதல் 30 கோடி ரூபாய் பணம், அமைச்சர் பதவி மற்றும் மாநில அந்தஸ்து தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாக ஓமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது மோடி-ஷா கூட்டணியின் ‘டூல்கிட்’ மற்றும் அவர்களின் நிலையான செயல்பாட்டின் நடைமுறை என விமர்சித்துள்ளார்.
Jammu,Jammu,Jammu and Kashmir
Jul 12, 2026 10:43 AM IST
ரூ.30 கோடி.. அமைச்சர் பதவியை முன்வைத்து எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் : காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு


