• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆந்திராவில் பரவும் கொரோனா; எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
ஆந்திராவில் பரவும் கொரோனா; எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருப்பதி, ஆந்திர மாநிலம் கடப்பாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் பலியாகியிருக்கிறார்கள். 60 வயது நபர், திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிறகு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 43 வயது நபர் ஒருவரும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பாதிப்பு

இதனையடுத்து, மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் எச்சரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் தயார்நிலை, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவசர உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மாநில கண்காணிப்பு அதிகாரி மூலம் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாவட்டங்களின் மருத்துவ சுகாதார அலுவலர்கள், அரசு பொது மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை

காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த தகவல் தள இணையதளத்தில் தாமதமின்றிப் பதிவு செய்யப்பட வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனைக் கருவிகள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அவசரகால போக்குவரத்து அமைப்புகள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகளின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதலுக்காக நியமிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். கொரோனா நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இந்தியாவில் 2022-ம் ஆண்டு கொரோனா பலி பதிவானது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉலகக் கிண்ணக் காற்பந்து: நார்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு மாஸாக முன்னேறியது இங்கிலாந்து; பெல்லிங்கம் இரட்டை கோல் அடித்து அசத்தல்!
tamiltamil



Read More

Previous Post

போஸ்ட் ஆபிஸ் TD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு… 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! – Sri Lanka Tamil News

Next Post
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! – Sri Lanka Tamil News

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin