இத்திட்டத்தில் கூட்டு வட்டி முறை பின்பற்றப்படுவதால், முதலீட்டின் மூலம் ஈட்டப்படும் வட்டியும் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. இதன் விளைவாக, முதிர்வு காலத்தின்போது கணிசமான தொகை கிடைக்கிறது. உதாரணமாக, ஒருவர் ஐந்து ஆண்டு கால வைப்புத் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், தற்போதைய 7.5 சதவீத வட்டி விகிதத்தின்படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஏறக்குறைய ரூ.2,24,975 வட்டியாகக் கிடைக்கும். முதிர்வு காலத்தின்போது கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.7,24,975-ஆக இருக்கும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் முதலீட்டின் மீது சுமார் 45 சதவீத வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.


