Last Updated:
அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஹோர்முஸ் அணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா தலையீட்டை நிறுத்தும் வரை கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்படும் என ஈரான் கூறியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹோர்முஸ் அணையை மூடுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மூன்று நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.
இதனிடையே, ஈரானின் உச்ச தலைவராக இருந்து கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்லுவோம் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி மக்கள் பேரணி சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தன்னை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்., அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், ஈரானை நோக்கி ஆயிரம் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபரான தன்னை படுகொலை செய்யவோ அல்லது படுகொலை செய்ய முயற்சித்தாலோ அந்நாட்டை அழிப்பதற்கான உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளதாகவும், ஓராண்டு காலத்திற்குள் ஈரானை முற்றிலுமாக அழித்தொழிக்கத் தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மூன்று நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ஹோர்முஸ் அணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது “தலையீட்டை” நிறுத்தும் வரை, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.


