
இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த மூன்று போட்டிகளையும் வென்றிருந்த இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றுவதை ஏற்கெனவே உறுதி செய்த நிலையில், சனிக்கிழமை (11) நடைபெற்ற ஐந்தாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்து 4-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

