ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, சட்டவிரோதமாக ரீப்பீட்டர் வகை துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
அத்துடன், அது ஏதேனும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காலி மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

