Last Updated:
2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று ஆண்டனி அல்பனீஸ் கூறினார்.
அரசு முறை பயணத்தின் ஒரு பகுதியாக, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸை, அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஸ்டீவ் வாக், லிசா ஸ்தாலேகர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், புகழ்பெற்ற ஷேன் வார்ன் பெயரிலான பார்வையாளர் மாடத்தில் இரு நாட்டு பிரதமர்களும் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பிரதமர் மோடியின் இந்த ஆஸி. பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு மற்றும் அரசியல் நட்புறவுக்கும் உறவுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தி உள்ளன.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலிருந்த இளம் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர். தொடர்ந்து அவர்களின் சீருடைகளில் கையொப்பமிட்டார். மேலும், ஆஸ்திரேலியாவின் சர்வதேச சின்னமான ‘ரூபி தி ரூ’ என்ற கங்காரு பொம்மையுடன் இரு பிரதமர்களும் கலகலப்பாக உரையாடினர்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “2030-ல் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக உள்ளது. தொடர்ந்து 2036 இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 2032-ல் பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும். உலகத்தரம் வாய்ந்த இந்த நிகழ்வுகளை நடத்துவதற்காக பெரிய அளவில் விளையாட்டு உள்கட்டமைப்புகள் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
#WATCH | Melbourne, Australia | During his visit to Melbourne Cricket Ground (MCG), Prime Minister Narendra Modi says, “India is set to host the Commonwealth Games in 2030. We are also striving to host the Olympics in India in 2036. Brisbane will host the Olympics in 2032. Sports… pic.twitter.com/FdFSa4tm0Y
— ANI (@ANI) July 10, 2026
தொடர்ந்து, சர் டொனால்ட் பிராட்மேனின் புகழ்பெற்ற கவர் டிரைவ் சிலைக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்ட் பிரதமர் மோடிக்கு ‘பிக் பேஷ் லீக்’ பேட்டை ஆண்டனி அல்பனீஸ் பரிசாக வழங்கினார். முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 தொடரான பிக் பேஷ் லீக் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்தார். இதையடுத்து 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று ஆண்டனி அல்பனீஸ் கூறினார்.

