Last Updated:
வனப்பகுதிகளில் மின்வழித்தட அகலத்தை 20% வரை குறைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மாநில தலைமைச் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் மின்வழித்தடங்களுக்காக மரங்கள் அதிகம் வெட்டப்படுவதை தடுக்க மின்வழித்தட அகலத்தை 20 % வரை குறைத்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காடுகளில் மின்வழித்தடங்களுக்காக அதிக மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கவும் , மின் வழித்தடங்களுக்கு தேவையான பரப்பளவை குறைக்கவும் புதிய நடைமுறையை பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட உயர் மின் கோபுரங்கள் , மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்பரப்பு சிறியதாகவும் , மின் கம்பிகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்துள்ளதாலும் மின்வழிப்பாத அகலத்தை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
400 kV மின்னழுத்தம் கொண்ட மின்வழிப்பாதைகளுக்கு அகலம் 46 மீ லிருந்து 40 மீ ஆகவும் , 765 kV மின்னழுத்த பாதைகளுக்கான அகலத்தை 55 மீ ஆக குறைக்கவும் புதிய நடைமுறைப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வனப் பகுதிகளுக்குள் 12 மீ வரை மின்வழிப்பாதை அகலம் குறைக்கப்பட்டுள்ளது.
Jul 09, 2026 10:27 PM IST
வனப்பகுதிகளில் மின்வழித்தடங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க…புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு


