இந்த இ-ஆட்டோக்கள் மூலம் கிராமங்களில் இருந்து உழவர் சந்தைக்கு விளைபொருட்களை எளிதாகக் கொண்டு வருவதுடன், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் நேரடியாகச் சென்று விற்பனை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் பொதுமக்கள் பசுமையான, தரமான காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வாங்கும் வசதியைப் பெறுகின்றனர்.


