• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கப்பு முக்கியம் பிகிலு.. AI Bubble 2026ல் வெடிக்கப்போகுது.. உஷாரய்யா உஷாரு! | AI Bubble Set to Burst in 2026: Lessons from Dot-Com Crash & Smart Investment Strategies for Profit Booking!

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கப்பு முக்கியம் பிகிலு.. AI Bubble 2026ல் வெடிக்கப்போகுது.. உஷாரய்யா உஷாரு! | AI Bubble Set to Burst in 2026: Lessons from Dot-Com Crash & Smart Investment Strategies for Profit Booking!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கப்பு முக்கியம் பிகிலு.. AI Bubble 2026ல் வெடிக்கப்போகுது.. உஷாரய்யா உஷாரு!

சென்னை: இந்த 2026ல் எங்க திரும்பினாலும் கேட்டகக்கூடிய ஒரு விஷயம் ஏஐ, சாமானியர்கள் சாட்பாட், போட்டோ – வீடியோ எடிட்டிங்-ல் துவங்கி வங்கி சேவை, மருத்து பரிசோதனை அறிக்கையின் ஆய்வு, சாப்ட்வேர் டெவலப்மென்ட் வரை அனைத்தும் ஏஐ-மயமாகிவிட்டது. இதனால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் ஏஐ பக்கம் சென்றால் 2026 முதலீட்டு சந்தையில் எப்போதும் காணாத மாற்றம் நடந்தது.

இது இந்த வருடத்தின் முதல் 6 மாதத்தின் கதை, அடித்த 6 மாதம் என்பது மொத்த கதையும் தலைகீழாக மாறியுள்ளது. அதாவது ஏஐ சேவை நல்லா இருக்கும், உதவிகரமாக இருக்கிறது என்பதெல்லாம் ஓகே.. ஆனால் ஏஐ பயன்பாடுக்கான செலவு என்பது மிகவும் அதிகமாக உள்ளது, இதை தாண்டி ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக தண்ணீர், மின்சாரம், வெப்பம் என பல இயற்கை சார்ந்த பிரச்சனைகளும் உருவாகியுள்ளது.

கப்பு முக்கியம் பிகிலு.. AI Bubble 2026ல் வெடிக்கப்போகுது.. உஷாரய்யா உஷாரு!

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மெல்ல மெல்ல பெரியதாகி வந்த AI Bubble 2026ல் வெடிக்கப்போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, இதற்கான சிக்னல் தென்கொரிய பங்குச்சந்தையில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஏஐ பபுள் வெடிக்கும் பட்சத்தில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்..? எப்படி லாபத்தை எடுக்க முடியும்..? என்பதை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

இந்த AI Bubble-க்கு சரியான உதாரணம் 2000ல் ஏற்பட்ட Dot-com bubble தான். 1995-2000 வரையிலான காலத்தில் உருவான இந்த டாட் காம் பபுள் அமெரிக்காவின் எஸ் அண்ட் பி இன்டெக்ஸ் 212 சதவீதம் உயர்ந்தது, பபுள் வெடித்த பின்பு 50 சதவீதம் குறைந்தது. இதேபோல் நாஸ்டாக்-ஐ பார்த்தால் 570-600 சதவீதம் வரையில் இந்த 5 வருட காலத்தில் உயர்ந்தது, 2000 மார்ச் மாதத்தில் உச்சத்தில் இருந்து 78 சதவீதம் சரிந்தது.

இந்த காலக்கட்டத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்தகள் 3 விதம், முதலாவது டாட் காம் பபுள் வெடித்து கரெக்ஷன் முடியட்டும் அதன் பின்பு முதலீடு செய்யலாம் என காத்திருந்தவர்கள் பெரும் வருமானத்தை இழந்தனர், 2வது தரப்பினர் அதிக மதிப்பீட்டில் எப்படியாவது இந்த Race-ல் நுழைய வேண்டும் என லேட்டாக வந்து என்டரி கொடுத்தவர்கள் – இவர்களும் பெரும்பாலும் பணத்தை இழந்தனர்..

இறுதியாக முதலில் வந்தோமா, நடுவில் வந்தோமா என்பது இல்லாமல் சந்தை நிலைக்கு ஏற்ப சரியாக கணித்து முதலீட்டை நிர்வாகம் செய்தவர்கள் தான் இந்த டாட் காம் பபுள் காலத்தில் பெரும் தொகையை லாபம் ஈட்டினர்.

இது தான் ஒவ்வொரு பபுள் வெடிக்கும்போதும் நடக்கும், இதில் இருந்து நாம் எப்படி சாதுரியமாக முதலீடு செய்து சரியான நேரத்தில் வெளியேறுகிறோம், அல்லது தொடர்ந்து முதலீட்டை நிர்வாகம் செய்து நகர்கிறோம் என்பதில் தான் உங்களுடைய புத்திசாலிதனம் உள்ளது.

பங்கு விலை என்னாகும்…

உதாரணமாக தற்போது ஏஐ துறையில் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கும் மெட்டா நிறுவன பங்குகள் தற்போது 600 டாலரில் வர்த்தகமாகிறது, இது ஏஐ பபுள் வெடிக்கும் முன்பு 800 டாலர் வரையில் உயரும்.. வெடித்த பின்பு 30 சதவீதம் சரிந்தாலும் தற்போதைய நிலைக்கு நிகராக இருக்கும். இதன் பின்பு வழக்கம் போல் வருடத்திற்கு 10-15 சதவீதம் உயரும்.

ஆனால் தற்போது நீங்கள் முதலீடு செய்யாமல் மொத்த பணத்தையும் பணமாக வைத்திருந்தால் பணவீக்கம் மூலம் உங்களுடைய பணத்தின் மதிப்பு குறையக்கூடும்.

சந்தையில் மாறுப்பட்ட தாக்கம்..

டாட் காம் பபுள் வெடிக்கும் போது அனைத்து நிறுவனமும் பாதிக்கப்படவில்லை, டெக் துறை சார்ந்த பங்குகள் சரிந்தாலும் வழக்கமாக வேல்யூ ஸ்டாக்ஸ் என பார்க்கப்படும் இன்பரா, யூடிலிட்டி சார்ந்த பங்குகள் நிலையான வளர்ச்சியை கொண்டு இருந்து. இதேபோல் தான் ஏஐ பபுள் வெடிக்கும் போதும்..

ஏஐ துறையை அதிகம் சார்ந்து இருக்கும் பங்குகள் பாதிக்கப்படலாம், சில நிறுவனங்கள் விற்கப்படலாம் அல்லது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் இணைக்குப்படலாம். இதற்கு மத்தியில் ஒரு சில சிறிய பிரிவு நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதால் முதலீட்டாளராகிய நீங்கள் உங்களுடைய முதலீட்டை ஏஐ பபுள் வெடிக்கும் முன் Diversify செய்வது அவசியம்.

கப்பு முக்கியம் பிகிலு..

இப்போது நீங்கள் ஏஐ சார்ந்த நிறுவன பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்து நல்ல லாபத்தில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், இதில் பாதி அல்லது 30-40 சதவீத பங்குகளை விற்று லாபம் எடுப்பது உகந்தது. ஏஐ பபுள் வெடித்தால் மொத்த முதலீடும் வீண் ஆகாமல் தடுக்க முடியும். இதேபோல் முதலீடு செய்வதே லாபத்திற்காக என்பதால் தயக்கம் காட்டாமல் profit booking செய்யலாம்.

சரியான நேரத்தில் profit booking செய்யாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். 100 பங்குகளை வைத்திருந்தால் 20 பங்குகளை விற்கலாம் … நம்ப லாபம் தான் முக்கியம்.

Share This Article

English summary

AI Bubble Set to Burst in 2026: Lessons from Dot-Com Crash & Smart Investment Strategies for Profit Booking!

With soaring AI infrastructure costs, energy demands, and overvaluation signals from markets like South Korea, experts warn that the AI bubble could burst in 2026 similar to the 2000 dot-com crash, which saw Nasdaq plunge 78%. Investors should diversify portfolios, book partial profits in AI-heavy stocks like Meta, and shift to value stocks in infra and utilities to navigate the potential correction effectively.

Story first published: Wednesday, July 8, 2026, 13:15 [IST]

Read More

Previous Post

அரபிக்கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்.. அமீரகம் டூ பாகிஸ்தான் பயணித்தவர்களின் கதி என்ன? ஷாக் | Pakistan cargo plane fell down arabian sea now locates wreckage of the plane but 5 missing

Next Post

ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

Next Post
ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin