இந்தத் திட்டம் நிறைவடையும் போது, அனாக்கம்பொயில் மற்றும் மேப்பாடி இடையேயான பயண தூரம் 42 கிலோ மீட்டரிலிருந்து வெறும் 20 கிலோமீட்டராகக் குறையும். இதன் மூலம் கோழிக்கோட்டிலிருந்து வயநாட்டிற்கான பயண நேரம் சுமார் 1.5 மணி நேரம் வரை மிச்சமாகும் என்பதுடன், பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டிற்கான வர்த்தகப் போக்குவரத்தும் எளிதாகும். சுமார் 2,134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு, கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் நிதியுதவி செய்கிறது.


